இளையராஜா இசை: ‛துப்பறிவாளன் 2' அறிவிப்பு

தினமலர்  தினமலர்
இளையராஜா இசை: ‛துப்பறிவாளன் 2 அறிவிப்பு

நடிகர் விஷால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது. அவரது முதல் படமான செல்லமே 2004ம் ஆண்டு செப்டம்பர் 10ந் தேதி வெளிவந்தது. இதையொட்டி தனது அடுத்த படமாக துப்பறிவாளன் 2ம் பாகத்தை நேற்று முறைப்படி அறிவித்தார்.

இதனை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். நேற்று விஷால், மிஷ்கின், ஜி.கே.ரெட்டி ஆகியோர் இளையராஜாவை சந்தித்து அவரிடம் ஆசி வாங்கிய பிறகு, இதனை அறிவித்தனர். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

விஷால், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‛ஆக்ஷன்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை 2ம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்.

மூலக்கதை