பரியேறும் பெருமாளுக்கு புதுச்சேரி அரசு விருது

தினமலர்  தினமலர்
பரியேறும் பெருமாளுக்கு புதுச்சேரி அரசு விருது

புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்துகிறது. இந்த விழாவில் தமிழில் கடந்த ஆண்டு வெளியான ‛பரியேறும் பெருமாள்' சிறந்த படமாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கி கவுரவிக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

நாளை மறுநாள் (13ந் தேதி) மாலை 6 மணிக்கு தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கில் விழா தொடங்குகிறது. விழாவில் நகர்கீர்த்தன் (பெங்காலி), சூடானி ப்ரம் நைஜீரியா (மலையாளம்), மகாநடி (தெலுங்கு), ராஷி (இந்தி) ஆகிய படங்கள் சிறப்பு திரைப்படங்களாக திரையிடப்படுகிறது. வருகிற 17ந் தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது.

மூலக்கதை