திரைப்பட மானிய குழு அமைப்பு

தினமலர்  தினமலர்
திரைப்பட மானிய குழு அமைப்பு

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 25 தியேட்டர்களில் மட்டும் வெளியிடப்படும் தரமான படங்களுக்கு தமிழக அரசு ஆண்டு தோறும் மானியம் வழங்கி வருகிறது. முன்பு ஒரு படத்திற்கு 5 லட்சமாக இருந்தது பின்னர் 7 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளுக்கு தலா 7 லட்சம் வீதம் 149 படங்களுக்கு 10 கோடியே 43 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் இருந்து மானியத்திற்கு படங்களை தேர்வு செய்ய மானிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலி கான், நடிகர்கள் சரவணன், சிங்கமுத்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை