தர்பார்: ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

தினமலர்  தினமலர்
தர்பார்: ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

‛பேட்ட' படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கும் ‛தர்பார்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. கடைசிக்கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. போலீஸாக ரஜினி நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படம் துவங்கிய சமயத்திலேயே வெளியிடப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் காட்சிகளை செல்போனில் சிலர் படம் பிடித்து வெளிட்டு வந்தனர். பின்னர் படக்குழு சார்பில் இரண்டு ஸ்டில்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களையே போஸ்டர் டிசைன் தயார் செய்ய சொன்னார்கள்.

இந்நிலையில் ஓணம் பண்டிகையான இன்று(செப்.,11) ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் உற்சாகமான ரஜினி ரசிகர்கள் #DarbarSecondLook என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி டிரண்ட்டில் கொண்டு வந்தனர்.

மூலக்கதை