ஈராக் வழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல்: 31 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஈராக் வழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல்: 31 பேர் பலி

பாக்தாத்: ஈராக்கில் வழிபாட்டு தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.ஈராக்கின் தெற்கு மாகாணத்தில் கர்பாலா என்ற நகரில் பிரசித்தி பெற்ற ஷியா முஸ்லிம்களின் மசூதி உள்ளது. இவ்விடத்தில் இமாம் ஹூசைனின் நினைவிடம் உள்ளது. அவர் மறைந்த நாளை அஷூரா எனப்படும் தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி இவ்வழிபாட்டு தலத்தினை தரிசிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் மூச்சு திணறல் ஏற்பட்டு 31 பேர் இறந்தனர். பலர் மயக்கடைந்தனர்.காயமடைந்தவர்கள் கர்பாலா நகரில் உள்ள அல் ஹூசைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை கூடும் என ஈராக் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். பலியானவர்களுக்கு ஈராக் அதிபர் பர்ஹாம் அகமத் சலே இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை