அப்துல் காதிர் மரணம் | செப்டம்பர் 06, 2019

தினமலர்  தினமலர்
அப்துல் காதிர் மரணம் | செப்டம்பர் 06, 2019

லாகூர்: பாகிஸ்தான் ‘சுழல்’ ஜாம்பவான் அப்துல் காதிர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் காதிர். 67 டெஸ்ட் (236 விக்.,), 104 ஒரு நாள் (132) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐந்து ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். 1980–90ம் ஆண்டு காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் ஜொலித்தார். 1987ல் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் 30 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உலக கோப்பையில் (1983, 87) இரண்டு முறை பங்கேற்றுள்ளார். கடந்த 1993ல் இலங்கைக்கு எதிராக சார்ஜாவில் நடந்த ஒரு நாள் போட்டியுடன் ஓய்வு பெற்றார். இதன்பின், பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராகவும்  இருந்தார். வர்ணனையாளராகவும் பணியாற்றினார். 63 வயதான காதிர், நேற்று வீட்டில் இருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பாதி வழியிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார். 

 

மூலக்கதை