டெஸ்டில் ரோகித் துவக்கம் தருவாரா * தேர்வுக்குழு தலைவர் சூசகம் | செப்டம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
டெஸ்டில் ரோகித் துவக்கம் தருவாரா * தேர்வுக்குழு தலைவர் சூசகம் | செப்டம்பர் 09, 2019

புதுடில்லி: ‘‘டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, துவக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது,’’ என, தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்தார்.

இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் அரங்கில் மூன்று முறை இரட்டை சதம் அடித்தவர். சமீபத்திய உலக கோப்பை தொடரில் 5 சதம் விளாசினார். இருப்பினும் டெஸ்ட் அணியில் போதிய வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படுகிறார்.

விண்டீஸ் டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்ட போதும், களமிறங்க வாய்ப்பு தரப்படவில்லை. இவரது இடத்தில் (‘மிடில் ஆர்டர்’) வந்த ஹனுமா விஹாரி, ரன் மழை பொழிந்ததால், ரோகித்துக்கு மீண்டும் சிரமம் ஏற்பட்டது.

முன்னாள் கேப்டன் கங்குலி, ‘ரோகித்தை டெஸ்டில் துவக்க வீரராக களமிறக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறுகையில்,‘‘ விண்டீஸ் தொடருக்குப் பின் தேர்வுக்குழு இன்னும் சந்திக்கவில்லை. ரோகித்தை துவக்க வீரராக களமிறக்குவது குறித்து அடுத்த கூட்டத்தில் கண்டிப்பாக விவாதிப்போம். லோகேஷ் ராகுல் சிறந்த வீரர் தான். இழந்த ‘பார்மை’ மீட்க சற்று பயிற்சி தேவைப்படுகிறது,’’ என்றார்.

மூலக்கதை