பாக்., செல்ல இலங்கை வீரர்கள் மறுப்பு | செப்டம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
பாக்., செல்ல இலங்கை வீரர்கள் மறுப்பு | செப்டம்பர் 09, 2019

 கொழும்பு: பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை வீரர்கள் 10 பேர் மறுப்பு தெரிவித்து, தொடரில் இருந்து விலகினர்.

கடந்த 2009ல் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதன் பின் ஜிம்பாப்வே (2015), விண்டீஸ் (2018) தவிர, மற்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.

இதனிடையே இலங்கை அணி வரும் செப். 27 முதல் அக்., 9 வரை மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால் ஒரு நாள் அணி கேப்டன் கருணாரத்னே, ‘டுவென்டி–20’ அணி கேப்டன் மலிங்கா, ‘சீனியர்’ மாத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள், பாகிஸ்தான் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால், அங்கு செல்ல மறுத்து தொடரில் இருந்து விலகினர்.

மூலக்கதை