உலக கால்பந்து: இந்தியா 'டிரா'

தினமலர்  தினமலர்
உலக கால்பந்து: இந்தியா டிரா

தோகா: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் வலிமையான கத்தாருக்கு எதிரான போட்டியை இந்திய அணி 'டிரா' செய்தது.

உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் (2022) நடக்கவுள்ளது. ஆசிய பிரிவு 2வது கட்ட தகுதிச்சுற்றில் 40 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்திய அணி, 'இ' பிரிவில் வங்கதேசம், ஓமன், ஆப்கானிஸ்தான், கத்தாருடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்தியா (103 வது இடம்), 'ஆசிய சாம்பியன்', வலிமையான கத்தாரை ('நம்பர்-62'), அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. காய்ச்சல் காரணமாக இந்திய கேப்டன் சுனில் செத்ரி களமிறங்கவில்லை.

துவக்கத்தில் இருந்தே கத்தார் வீரர்கள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தனர். கத்தார் வீரர்களின் 14 கோல் வாய்ப்புகளை இந்திய அணி கேப்டன், கோல் கீப்பர் குர்பிரீத்சிங் சாந்து அசத்தலாக தடுக்க, முதல் பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது. இரண்டாவது பாதியில் 82வது நிமிடம் இந்தியாவின் உடாண்டா அடித்த பந்து, கத்தார் கோல் போஸ்டுக்கு சற்று மேலாக சென்றது. முடிவில் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. போட்டி 0-0 என 'டிரா' ஆனது.

மூலக்கதை