நதீம் அபார பந்துவீச்சு தென் ஆப்ரிக்கா ஏ திணறல்

தினகரன்  தினகரன்
நதீம் அபார பந்துவீச்சு தென் ஆப்ரிக்கா ஏ திணறல்

திருவனந்தபுரம்: இந்தியா ஏ அணியுடனா முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), தென் ஆப்ரிக்கா ஏ அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து திணறி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு சுருண்டது (51.5 ஓவர்). அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஷுப்மான் கில் 66 ரன், அங்கித் பாவ்னே 6 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பாவ்னே மேற்கொண்டு ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். கில் 90 ரன் (153 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), கர் பரத் 33, துபே 8, கவுதம் (0), ஷர்துல் 34 ரன் எடுக்க... நதீம், சிராஜ் டக் அவுட்டாகி வெளியேறினர். இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது (87.5 ஓவர்). ஜலஜ் சக்சேனா 61 ரன்னுடன் (96 பந்து, 11 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதைத் தொடர்ந்து, 139 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்துள்ளது. ஸுபேர் ஹம்சா 44 ரன் எடுத்தார். கிளாசன் 35, முல்டர் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ பந்துவீச்சில் நதீம் 2 விக்கெட் (9-3-13-2), சிராஜ், தாகூர், கவுதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க தென் ஆப்ரிக்கா ஏ அணி இன்னும் 14 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை