அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியை துறந்தார் ஜாக் மா

தினகரன்  தினகரன்
அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியை துறந்தார் ஜாக் மா

பிஜீங்: சீனாவில் ஆன்லைன் வணிக உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது அலிபாபா நிறுவனம். இதன் தலைவர் ஜாக். மா (55). சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், சிறந்த தொழில்முனைவோருமாக அடையாளம் காணப்பட்டவர். இவர் நேற்று தனது 55வது பிறந்த நாளில் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் கடந்த ஆண்டே தனது பிறந்தநாளின்போது தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் இயக்குனர்கள் குழு உறுப்பினராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார். இவர், முன்னாள் ஆங்கில ஆசிரியர். கடந்த 1999ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம், சீனாவின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் அமெரிக்காவின் சில்லறை விற்பனையாளர்களிடையே இணைப்பை உருவாக்கினார். பின்னர், அலிபாபா நிறுவனம் சீனாவின் வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையில்  சேவை செய்வதில் கவனத்தை செலுத்தியது. மேலும் ஆன்லைன் வங்கி, பொழுதுபோக்கு  என விரிவடைந்தது. சீனாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததன் காரணமாக 2019ம் ஆண்டின் முதல் பாதியில் அலிபாபாவின் விற்பனை 17.8 சதவீதமாக குறைந்துள்ளது.

மூலக்கதை