நாட்டின் வேளாண் ஏற்றுமதி முதல் காலாண்டில் குறைந்தது

தினமலர்  தினமலர்
நாட்டின் வேளாண் ஏற்றுமதி முதல் காலாண்டில் குறைந்தது

புதுடில்லி:நாட்டின் வேளாண் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலகட்டத்தில், 14.39 சதவீதம் குறைந்துஉள்ளது.



இது குறித்து, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் வேளாண் ஏற்றுமதி, ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான மதிப்பீட்டு காலத்தில், 38 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக உள்ளது. இது, 14.39 சதவீதம் குறைவாகும். நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 9.26 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.



இந்த கணக்கீட்டு காலத்தில், 11 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி, 5,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. இதேபோல் பிற வகைகளான, நிலக்கடலை, எருமை மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பழ வகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை