இந்திய அணியின் பயிற்சியாளராக நான் ஏன் மீண்டும் தேர்வானேன்?.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய அணியின் பயிற்சியாளராக நான் ஏன் மீண்டும் தேர்வானேன்?.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் மீண்டும் அவர்களின் பொறுப்பை தொடர்கின்றனர்.

ஆனால் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்ஜய் பங்கர் நீக்கப்பட்டு, விக்ரம் ரத்தோர் புதிய ‘பேட்டிங்’ பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இந்நிலையில், மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட பயிற்சியாளர்களின் சம்பளம் உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதன்முறை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ரவிசாஸ்திரிக்கு, ஆண்டுக்கு ரூ. 8 கோடி வழங்கப்பட்டது. தற்போது இவருக்கு 20 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 9. 5 கோடி முதல் ரூ. 10 கோடிக்குள் ஆண்டு சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதேபோல் ஸ்ரீதர், பரத் அருணுக்கு தலா ரூ. 3. 5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருக்கு ரூ. 2. 5 கோடி முதல் ரூ. 3 கோடியும் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய ஒப்பந்தம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இரண்டாவது முறையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘‘நான் மீண்டும் அணியின் பயிற்சியாளராக இங்கு வந்ததன் காரணம், இந்திய அணியின் மீதுள்ள நம்பிக்கைதான். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மாற்றத்தை பார்ப்பீர்கள்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக இளம் வீரர்கள் வரவுள்ளனர். இந்த உலகில் யாரும் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை.

அனைவரும் தவறில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்ள முடியும்’’ என்றார்.

.

மூலக்கதை