அறிமுக டெஸ்டிலேயே ஆப்கான் அசத்தல்: கேப்டன் ரசித் கான் புது உலக சாதனை... ஒரே டெஸ்டில் 10 விக்கெட்; அரைசதம் விளாசல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அறிமுக டெஸ்டிலேயே ஆப்கான் அசத்தல்: கேப்டன் ரசித் கான் புது உலக சாதனை... ஒரே டெஸ்டில் 10 விக்கெட்; அரைசதம் விளாசல்

தாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 342 ரன்கள், வங்கதேசம் 205 ரன்கள் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, வங்கதேச அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை துரத்திய வங்கதேச அணி, 4வது நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நேற்றைய 5வது நாள் துவக்கத்தில் கனமழை குறுக்கிட்டதால் போட்டி உணவு இடைவேளை வரை போட்டி நடக்கவில்லை.

மழை நின்ற பின் வெறும் 13 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட, மீண்டும் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

வெறும் 18. 3 ஓவர்கள் மட்டுமே விளையாட அம்பயர்கள் அறிவுறுத்த, சுழல் பந்துகளில் திணறடித்த கேப்டன் ரசித் கான் 4 விக்கெட்டில் 3 விக்கெட் வீழ்த்த வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டநாயகன் விருதை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசித் கான் தட்டிச் சென்றார். இவர், மொத்தமாக 11 விக்கெட் மற்றும் ஒரு அரைசதம் (51 ரன்கள், முதல் இன்னிங்ஸ்) அடித்து மிரட்டினார்.இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் கேப்டனாக தனது அறிமுக போட்டியில், ஒரே டெஸ்டில் 10 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற புது உலக சாதனை படைத்தார். தவிர, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் மற்றும் அரைசதம் விளாசிய மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

முன்னதாக பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர்.

.

மூலக்கதை