சுவிட்சர்லாந்தில் நடக்கும் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி போட்டி: ரஷ்யா, அமெரிக்காவுடன் இந்தியா மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுவிட்சர்லாந்தில் நடக்கும் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி போட்டி: ரஷ்யா, அமெரிக்காவுடன் இந்தியா மோதல்

லாசானே: வரும் 2020ம் ஆண்டில் நடைபெறக்கூடிய ஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதிச் சுற்று போட்டி வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் எந்த அணி, எந்த அணியுடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் ‘டிரா’ (குலுக்கல்) சுவிட்சர்லாந்தில் நேற்று நடந்தது.இதன்படி ஆண்கள் பிரிவில் தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 22வது இடத்தில் உள்ள ரஷியாவை சந்திக்கிறது. பெண்கள் பிரிவில் 9வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 13வது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் தலா 2 முறை மோத வேண்டும்.

அதிக புள்ளி பெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை