ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திருப்பம்: இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி... மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திருப்பம்: இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி... மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மும்பை: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கில், அதன் பங்குதாரரான இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து, மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டைப் பெற, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய நேரடி முதலீடு வாரியத்தின் அனுமதியை, அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் பெற்று தந்தார்.

இதற்காக அவர், கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக 2017ல், சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை சிபிஐ கைது செய்துள்ளது.



மேலும், இந்த வழக்கில் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்த, சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க மும்பை சிறப்பு நீதி மன்றத்தில் சிபிஐ அனுமதி கோரி மனு அளித்தது. இதனை தொடர்ந்து, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள, இந்திராணி முகர்ஜியை விசாரிக்க சிபிஐக்கு மும்பை சிறப்பு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

விசாரணையை, காலை 9. 30 மணிக்கும் பகல் 12. 30 மணிக்கும் இடையே நடத்துமாறு தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை