நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பது தொடர்பான தமிழக அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நில

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பது தொடர்பான தமிழக அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நில

நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பது தொடர்பான தமிழக அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நில அபகரிப்பு புகார்களை சிறப்பு நீதிமன்ற அமர்வுகள் மூலம் விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்திருந்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்தமனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு 8 வாரங்கள் இடைக்கால தடை விதித்தனர். இதுதொடர்பாக 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மனுதாரர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை