பட வாய்ப்புக்காக சம்பளத்தை குறைத்த நடிகை

என் தமிழ்  என் தமிழ்
பட வாய்ப்புக்காக சம்பளத்தை குறைத்த நடிகை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை, பாலிவுட் பட வாய்ப்புக்காக தனது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை ஒருவர் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறாராம். சமீபத்தில் இவர் தமிழில் இரண்டெழுத்து நடிகருடன் நடித்த படம் சக்கை போடு போட்டதாம். இதையடுத்து தனது சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடிக்கும் மாற்றினாராம்.

நீங்கள் இப்படி ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தலாமா?’‘ என்று தயாரிப்பாளரும், டைரக்டரும் நியாயம் கேட்டார்களாம். அவர்களிடம், “விருப்பம் இருந்தால் நான் கேட்ட சம்பளத்தை கொடுங்கள்…முடியவில்லை என்றால் இடத்தை காலி செய்யுங்கள்” என்று ஸ்வீட் கடை நடிகை கறாராக கூறிவிட்டாராம்.

அதே நடிகை தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறாராம். ஆனால் அங்கு மிகவும் குறைவான சம்பளத்தில் தான் நடித்து வருகிறாராம். ஆரம்பத்திலேயே சம்பளத்தை உயர்த்திவிட்டால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இப்படி முடிவு எடுத்திருக்கிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை