பாகிஸ்தான் மந்திர பந்து வீச்சாளர் மரணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் மந்திர பந்து வீச்சாளர் மரணம்

லாகூர்: முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.

உலகின் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னராக வலம் வந்தவர் அப்துல் காதிர்.   தனக்கென தனி பாணியில் சுழற்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஜாம்பவான். லாகூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவருக்கு நேற்று இரவு  திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள்  இறந்துவிட்டதாக அறிவித்தனர். பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட், 104 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இம்ரான் கான் கேப்டனாக இருந்த காலத்தில் அப்துல் காதிர் மிகப் பெரிய அளவில் ஜொலித்தார்.

இம்ரான் கானுக்கு மிக மிகப் பிடித்த சுழற்பந்து வீச்சாளரும் கூட. அப்துல் காதிர் மறைவுக்கு பாக். கிரிக்கெட்வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

அப்துல் காதிருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மகளை, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உமர் அக்மல் மணந்துள்ளார்.

.

மூலக்கதை