சபைக்காவலரைத் தாக்கியதாக எழுந்த புகார் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரும் சட்டப்பேரவைச் செயலரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர். சட்டப்பேரவை தேமுதிக கொறடா

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சபைக்காவலரைத் தாக்கியதாக எழுந்த புகார் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரும் சட்டப்பேரவைச் செயலரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர். சட்டப்பேரவை தேமுதிக கொறடா

சபைக்காவலரைத் தாக்கியதாக எழுந்த புகார் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரும் சட்டப்பேரவைச் செயலரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர். சட்டப்பேரவை தேமுதிக கொறடா சந்திரகுமார், உறுப்பினர்கள் வெங்கடேசன், பார்த்தசாரதி, நல்லதம்பி, பாபு முருகவேல் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுத்தீனை சந்தித்து விளக்க கடிதங்களை அளித்தனர். விளக்க கடிதம் குறித்துப் பேசிய சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுத்தீன், சட்டப்பேரவை உரிமைக் குழுவிற்கு கொடுக்கப்பட வேண்டிய விளக்கக் கடிதம் தன்னிடம் கொடுக்கப்பட்டதாகவும், அதை தான் உரிமைக்குழுவின் தலைவருக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறினார். தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார், பேசுகையில் உரிமைக்குழுவுக்கு கட்சியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் உரிமைக்குழு எடுக்கும் முடிவைப் பொருத்து, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபாலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள், அவைக்காவலர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேமுதிக உறுப்பினர்கள் மோகன்ராஜ், சந்திரகுமார், வெங்கடேசன், பார்த்திபன், தினகரன், சேகர் ஆகியோருக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தினகரன், சேகர் ஆகியோர் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை