பாக்., தீவிரவாதிகளுடன் தொடர்பா?.. கேரளாவில் ஈரான் தம்பதி கைது பாஸ்போர்ட், விசா பறிமுதல்; காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாக்., தீவிரவாதிகளுடன் தொடர்பா?.. கேரளாவில் ஈரான் தம்பதி கைது பாஸ்போர்ட், விசா பறிமுதல்; காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

திருவனந்தபுரம்: ேகரள மாநிலம், ெகால்லம் அருகே குண்டறா பகுதியை சேர்ந்தவர் யாசின். இவரது கடைக்கு 3 நாட்களுக்கு முன்பு பொருட்கள் வாங்க ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் வந்தனர்.

அவர்கள் சோப் வாங்கியுள்ளனர். பின்னர் அந்த வாலிபர் ரூ. 2,000க்கு சில்லறை கேட்டுள்ளார்.


இதையடுத்து யாசின் தனது கைப்பையை எடுத்து சில்லறை பணத்தை எடுத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர் திடீரென யாசினின் கையில் இருந்த பணப் பையை பறித்து கொண்டு ஓடினார்.

அந்த பகுதியில் நின்றவர்கள் திரண்டு 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை குண்டறா போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்த ஆமீர் (27) மற்றும் அவரது மனைவி நஸ்ரின்(20) என்பது தெரியவந்தது.

அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக சென்னை வந்ததாகவும், டெல்லியை சேர்ந்த நண்பர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு கேரளாவை சுற்றிப்பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் இதை போலீசார் நம்பவில்லை.

இதையடுத்து போலீசார் அவர்களை கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஈரான் தம்பதி பணப் பையை பறித்து கொண்டு ஓடியதன் பின்னணியில் வேறு விஷயங்கள் ஏதும் உள்ளனவா? என்பதை அறிந்துகொள்ள அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீர்மானித்தனர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் இந்தியா வந்தபோது இவர்களுடன் மேலும் 4 பேர் வந்துள்ளனர்.

இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் நேபாளம் வழியாக பாகிஸ்தானுககு சென்றுள்ளதும் தெரியவந்தது.

ஆமீர், நஸ்ரின் தம்பதியினர் கடந்த மார்ச் 7ம் தேதி இந்தியா வந்த அதே நாளில்தான், கேரளாவில் வைத்து ஜெர்மன் நாட்டை சேரந்த லிசா என்ற இளம்பெண் மாயமானார். இவரும் பாகிஸ்தான் சென்றிருக்கலாம் என்ற உளவுத்துறை கருதுகிறது.

ஈரான் தம்பதி இந்தியா வந்ததும், லிசா இந்தியாவை விட்டு மாயமானதும் ஒரே நாள் என்பதால் உளவுத்துறைக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தம்பதிகளிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் விசாவையும் உளவுதுறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் பலமுறை பாகிஸ்தானுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. இருவரையும் இன்று கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீர்மானித்துள்ளனர்.

இருவருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என உளவுதுறையினர் சந்தேக்கின்றனர். எனவே இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு எடுத்துள்ளனர்.

இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை