நடிகையின் காதலன் தயாரிப்பாளரானதற்கு இதுதான் காரணமா?

என் தமிழ்  என் தமிழ்
நடிகையின் காதலன் தயாரிப்பாளரானதற்கு இதுதான் காரணமா?

நம்பர் நடிகையின் காதலன், முன்னணி நடிகரை வைத்து இயக்க இருந்த படம் டிராப் ஆனதால் தான் அவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளாராம்.

நம்பர் நடிகையின் காதலன் அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினாலும், பிரபல நடிகரை வைத்து கூட்டமாக இயக்கிய படம் தோல்வி அடைந்ததாம். இதனால் அடுத்து வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லோக்கல் நடிகருக்காக கதையை எழுதினாராம்.

ஆனால் படத்தின் பட்ஜெட்டை குறைக்க கோரி தயாரிப்பாளர் தரப்பு இயக்குனரிடம் வேண்டுகோள் விடுத்ததாம். ஆனால் அவரோ விடாப்புடியாக பட்ஜெட்டை குறைக்க முடியாது என கூறியதால் தயாரிப்பாளர் தரப்பு படத்தை கைவிட்டதாக செய்திகள் பரவி வருகிறதாம். இதனால் தான் நம்பர் நடிகையின் காதலன் பட தயாரிப்பில் இறங்கிவிட்டாராம்.

மூலக்கதை