டி20, ஒரு நாள் சாதனையை தொடர்ந்து டெஸ்டிலும் இந்திய அணி மீண்டும் இமாலய வெற்றி: 120 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டி20, ஒரு நாள் சாதனையை தொடர்ந்து டெஸ்டிலும் இந்திய அணி மீண்டும் இமாலய வெற்றி: 120 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம்

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்ெகட் அணி, முதலாவது டெஸ்டில் 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜமைக்காவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் எடுத்தது.

ஹனுமா விஹாரி 111 ரன்கள் எடுத்தார். மயங்க் அகர்வால் 55, விராத் கோஹ்லி 76, இஷாந்த் சர்மா 57 ரன்கள் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பும்ரா ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, இஷாந்த் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு ‘பாலோ-ஆனை’ வழங்காமல் 299 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கியது.

ராகுல் 6 ரன்களிலும், மயங்க் அகர்வால் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த புஜாரா 27 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கோஹ்லி, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ரஹானேவும் (64), விஹாரியும் (53) நிலைத்து நின்று ஆடிய நிலையில், அணியின் ஸ்கோர், 4 விக்கெட்டுக்கு 168 ரன்களாக இருந்த நிலையில் டிக்ளர் செய்யப்பட்டது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த அணி வெற்றி பெற 423 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று 4வது நாள் ஆட்டம் தொடர்ந்தது.   இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்ததால், இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஜடேஜா, ஷமி தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.

ஹனுமா விஹாரி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஏற்கனவே அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடர்களை வென்றிருந்த இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அந்த அணியை ‘ஒயிட் வாஸ்’ செய்து அசத்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறது.

தவிர, அந்நிய மண்ணில் இந்திய அணி தனது 6வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

.

மூலக்கதை