துப்பாக்கி சுடுதல் போட்டி... பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
துப்பாக்கி சுடுதல் போட்டி... பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த அபூர்வி சண்டிலா, டெல்லியைச் சேர்ந்த தீபக் குமார் இணை தங்கம் வென்று அசத்தியது.

இதேபோல், மனு பாகேர், சவுதிரி சவுரவ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி சிங் தேஸ்வால், அபிஷேக் வர்மா ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதி நாளில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்தை இந்திய வீரர்கள் கைப்பற்றினர். இந்த போட்டியில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவே அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தில் அசத்தி உள்ளது.

.

மூலக்கதை