லட்சத்தில் இருந்து கோடிக்கு தாவிய நடிகை

என் தமிழ்  என் தமிழ்
லட்சத்தில் இருந்து கோடிக்கு தாவிய நடிகை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டாராம்.

திருமுருகனின் இன்னொரு பெயரை கொண்ட நடிகருடன், ஸ்வீட் கடை நடிகை ஒரு புதிய படத்தில் ஜோடி சேர இருந்தார். இந்த படத்தில் நடிக்க அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். “ஐம்பது லட்சம் வாங்கி வந்த நீங்கள் இப்படி ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தலாமா?’‘ என்று தயாரிப்பாளரும், டைரக்டரும் நியாயம் கேட்டார்களாம்.

அவர்களிடம், “விருப்பம் இருந்தால் நான் கேட்ட சம்பளத்தை கொடுங்கள்…முடியவில்லை என்றால் இடத்தை காலி செய்யுங்கள்” என்று ஸ்வீட் கடை நடிகை கறாராக கூறிவிட்டாராம். தயாரிப்பாளரும், டைரக்டரும் வேறு கதாநாயகியை நடிக்க வைக்கலாமா? என்று யோசித்து வருகிறார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை