சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் யூரியா விலை உயராது…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் யூரியா விலை உயராது…

சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் யூரியா விலை உயராது என்று மத்திய உரத் துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யூரியா போக்குவரத்துக்கு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள 10 சதவிகித கட்டண உயர்வை மானியமாக அரசு ஏற்கும் என்று தெரிவித்தார். இதனால், விவசாயிகளுக்கு யூரியா விலை உயர வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் அனந்த குமார் கூறினார். யூரியா விலை ஒரு டன்னுக்கு 5 ஆயிரத்து 360 ரூபாயாகவே நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை