செப். 24ல் விஜய் ஹசாரே டிராபி தொடக்கம்: ‘பேட்ஸ்மேன்கள்’ மனதளவில் தயாராக வேண்டும்...தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் விருப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
செப். 24ல் விஜய் ஹசாரே டிராபி தொடக்கம்: ‘பேட்ஸ்மேன்கள்’ மனதளவில் தயாராக வேண்டும்...தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் விருப்பம்

சென்னை:  உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான தொடர், வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 16 வரை நடக்கிறது.

இந்நிலையில், தமிழக கிரிக்கெட் போர்டு, தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணி  வீரர்களை தேர்வு செய்துள்ளது. கடந்த 2016-17ல் நடந்த கடைசி விஜய் ஹசாரே டிராபி தொடரில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக், அந்தாண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் (607 ரன்கள்) முதலிடம் பிடித்தார்.

அப்போது, தமிழக அணி கோப்பை வென்றது.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது: 19 வயதுக்கு உட்பட்ட தொடரில் இருந்து வரும் வீரர்கள் சீனியர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

சொல்லப்போனால் கடந்த 4 ஆண்டில் வாஷிங்டன் சுந்தர் ஒருவர் மட்டுமே தமிழகத்தில் இருந்து முதல் தர லீக்கில் வளர்ந்து வருகிறார். இந்தாண்டு விஜய் ஹசாரே தொடரை பொருத்த வரையில், நடராஜன், விக்னேஷ், பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.

ஆனால் அவர்கள் தொடர் முழுதும் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதே என் கவலை. சுழற்பந்துவீச்சில் அஷ்வின், சுந்தர் உள்ளனர்.

முருகன் அஷ்வினும் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. முதலில் ‘பேட்ஸ்மேன்கள்’ மனதளவில் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை