அமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி

பாரிஸ்: பிரான்சில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பும் உடனிருந்தார்.

இந்த புகைப்படம் கிளிக் செய்யப்பட்ட விதம்தான், இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கனடா பிரதமர் ட்ரூடோவைப் பார்க்கும் டிரம்ப் மனைவி மெலனியா, மரியாதை நிமித்தமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.


இந்தப் புகைப்படத்தை எடுத்தபோது, மெலனியா கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு ‘ஏர் கிஸ்’ கொடுப்பது போன்ற முகபாவனை அமைந்திருக்கும். அப்போது, டிரம்பின்  ரியாக்‌ஷன்தான் இப்போது புகைப்படம் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் கிளிக் செய்யப்பட்ட படம்தான் தற்போதைய வைரலாக உள்ளது.



இதேபோல், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரன் மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு இடையில் உரசல் போக்கு திடீரென அதிகரித்துள்ளது. போல்சனாரோ, மாக்ரனின் மனைவியை ஒரு இடத்தில் கேலி செய்ய, அதற்காக பிரான்ஸ் அதிபர் கடும் கோபத்தில் உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மாக்ரன், “பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேசப் பிரச்னையாகும். ஜி-7 மாநாட்டில் அது தலையாயப் பிரச்னையாகக் கருதி விவாதிக்கப்பட வேண்டும்” என்று கருத்திட்டிருந்தார்.

அதற்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, “காலனி ஆதிக்க மனோபாவத்தைத்தான் இது காட்டுகிறது” என உஷ்ணமானார். இதற்கிடையே பேஸ்புக் பக்கத்தில் ஒருவர், ‘இப்போது புரிகிறதா… ஏன் போல்சனாரோவை, மாக்ரன் வம்புக்கு இழுக்கிறார் என்று. . ?” என்று கூறி பதிவிட்டார்.

அதனுடன், மாக்ரனின் 66 வயது மனைவியான பிரிகிட் மாக்ரனின் படத்தையும் போல்சனாரோவின் இளவயது மனைவியின் படத்தையும் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டில் போல்சனாரோ, “அவரை அசிங்கப்படுத்தாதீர்கள், ஹ.

ஹா. . . ” என கமென்ட் பதிவிட்டிருந்தார்.

இதனால் கடும் கோபத்துக்கு ஆளான மாக்ரன், “என் மனைவி குறித்து மிகவும் கீழ்த்தரமான கமென்ட்களை சொல்லியிருக்கிறார் அந்த நபர். இது மிகவும் வருத்தமாகும்.

குறிப்பாக பிரேசிலின் குடிமக்களுக்கு. தங்கள் நாட்டு அதிபர் இப்படி கீழ்த்தரமான ஒரு விஷயத்தை செய்துள்ளாரே என்று அந்நாட்டுப் பெண்கள் அவமானப்படுவார்கள் என்றே நினைக்கிறேன்.

பிரேசில் நாட்டு மக்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். அவர்களும், இதைப் பார்த்து அவமானப்படுவார்கள்” என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

இதற்கிடையே, அமேசான் காட்டுத் தீ விவகாரத்திலும் பிரேசில் அதிபர் போல்சனாரோ, “அமேசான் விவகாரத்தில் ஆர்வம் கொண்டிருப்பது போன்று அதிபர் மாக்ரன் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது மாக்ரனின் காலனி அல்ல.

ஒரு நாட்டின் இறையாண்மைக்கு மரியாதை கொடுத்து அவர் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை