படத்தில் நடிக்கும் முன்பே முழு சம்பளம் கேட்கும் நடிகர்

என் தமிழ்  என் தமிழ்
படத்தில் நடிக்கும் முன்பே முழு சம்பளம் கேட்கும் நடிகர்

முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என பிரபல நடிகர் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுகிறாராம்.

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த பிரபல நடிகர், ஒருசில படங்களில் மட்டும் நடித்து, புகழின் உச்சத்தில் இருந்த போதே தவிர்க்க முடியாத பிரச்சனைகள் காரணமாக நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த அந்த நடிகர் ஹீரோ வேடங்களுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு வில்லனாக களமிறங்கினாராம்.

குறிப்பாக ஜெயம் நடிகருடன் அவர் நடித்த படத்துக்கு பின் அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் குவியத் தொடங்கியதாம். முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்தால், அப்படம் ரிலீசான பின்னர் தனது சம்பளத்தை வாங்கி கொள்ளும் பழக்கம் கொண்ட அந்த நடிகர், தற்போது முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என கறார் காட்டுகிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை