நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை

என் தமிழ்  என் தமிழ்
நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை

கதாநாயகியான முதல் படத்திலேயே பேரும் புகழும் பெற்ற நடிகை, தற்போது நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.

படங்களில் ஒரு சில காட்சிகள், பின்னாடி ஓரமாக நிற்கும் காட்சிகளில் நடித்த அருவியான நடிகை, ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றாராம். அந்த படம் வந்து சில வருடங்கள் ஆகி விட்டதாம். இதன் பிறகு என்ன படத்தில் நடிகை நடிப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருந்தார்களாம்.

ஆனால், நடிகையோ எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாராம். பல கதைகளை கேட்டு கேட்டு வெறுத்து போய் இருக்கிறாராம் நடிகை. எந்த கதையை தேர்வு செய்வது தெரியாமல் குழம்பி போயிருக்கிறாராம். இதனால், இனிமேல் நடிப்பே வேண்டாம் என்று முடிவு வந்துவிட்டாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை