சத்தீஸ்கரில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
சத்தீஸ்கரில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணபூர் மாவட்ட உள்ள ஆர்ச்சா காவல் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள துர்பேடா கிராமத்தின் காட்டு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவோயிஸ்டுகள் முகாமில் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சண்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போலீசார் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை