பக்ரைன் இளவரசருடன் மோடி சந்திப்பு

தினமலர்  தினமலர்
பக்ரைன் இளவரசருடன் மோடி சந்திப்பு

மனாமா: பிரான்ஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதற்கட்டமாக, பிரான்ஸ் சென்றார். அந்நாட்டு அதிபர் மேக்ரோன் ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.

பின்னர் ஐக்கிய அரபு எமிரட்ஸ் சென்று அபுதாபி வந்தடைந்தார். அங்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை சந்தித்து இரு தரப்பு உறவு, வர்த்தகம், இரு தரப்பு நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் ஜாயீத்'' என்ற விருது மோடிக்கு வழங்கப்பட்டது.


இரு நாடுகள் பயணத்தை முடித்த மோடி இன்று பக்ரைன் சென்றடைந்தார். மனாமா நகர் அரண்மணையில் பக்ரைன் இளவரசர் கலிபா பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசினார். பின்னர் கலிபா பின் சல்மான் அளித்த விருந்தில் மோடி பங்கேற்றார்.

மூலக்கதை