முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி

தினகரன்  தினகரன்
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி

டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் அருண் ஜேட்லியின் வீட்டில் வைக்கப்பட்டு உள்ள உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் ஜேட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவும் ஜேட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாஜக நிர்வாகிகள் பலர் ஜேட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார். இவருக்கு வயது 66, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் இன்று பிரிந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அருண் ஜேட்லி உயிர் பிரிந்தது.அருண் ஜேட்லியின் உடல் இன்று இரவு முழுவதும் அவரது இல்லத்திலேயே வைக்கப்பட்டிருக்கும். குடும்பத்தினர் மற்றும் அஞ்சலி செலுத்திய பின்னர் நாளை காலை 10 மணியளவில் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு பாஜக தலைமையகம் அமைந்திருக்கக்கூடிய தீன் தயாள் உபாத்யாயாவில் வைக்கப்படும். அதன் பிறகு 2 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு யமுனை நதிக்கரை மயானத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை