சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை- திருச்சி சிவா பேட்டி

தினகரன்  தினகரன்
சட்டம்  ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை திருச்சி சிவா பேட்டி

டெல்லி: சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் போராட்டம் நடத்த வந்ததாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது என்று திமுகவை சேர்ந்த திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார். ஆளுநர் அழைப்பின் பேரில் தான் ராகுல்காந்தி காஷ்மீர் சென்றார். எங்கள் நோக்கத்தை தவறாக சித்தரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீரில் ஆய்வு செய்ய சென்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுத்ததை அடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லி திரும்பினர்.

மூலக்கதை