காஷ்மீர் பெயரால் பயங்கரவாதத்திற்கு பாக்., ஆதரவு

தினமலர்  தினமலர்
காஷ்மீர் பெயரால் பயங்கரவாதத்திற்கு பாக்., ஆதரவு

ரவாலாகோட் : காஷ்மீரில் உள்ள குழப்பமான சூழலை பயன்படுத்தி பல ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சி தலைவரும் பத்திரிக்கையாளருமான சர்தார் சாகிர் கூறுகையில், பயங்கரவாதிகளை பயன்படுத்தி காஷ்மீரில் நிலையற்ற சூழலை பாகிஸ்தான் உருவாக்கி உள்ளது. 1989 ல் காஷ்மீர் மக்கள் நடத்திய போராட்டத்தை பயன்படுத்தி ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜாமியாத் உல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களை உருவாக்கியது.

அதன் பிறகு ஹபீஸ் சையதின் லக்ஷர் இ தொய்பா, ஜமாத் உத் தவா போன்ற அமைப்புக்களையும் கொண்டு வந்தது. பாக்., உளவு அமைப்பு இந்த இயக்கங்களுக்கு அளித்து வரும் ஆதரவால் அமைதிக்காக போராட வேண்டி உள்ளது. உலக அமைப்புக்களும் பயங்கரவாதத்தின் செயல்பாடுகளை சந்தித்து வருகின்றன. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.


சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பு இருந்தாலும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற அமைப்புக்களை பாக்., ஊக்குவித்து வருகிறது. தற்போது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் பெரிய அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். உலகின் கவனம் காஷ்மீரில் உள்ளது. ஆனால் பாக்., உளவு அமைப்புக்கள் இதை திசை திருப்பி பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ வைத்து வருகின்றன என்றார்.

மூலக்கதை