மாற்றுத்திறனாளிகளுக்கான உலககோப்பை கிரிக்கெட் மு.க.ஸ்டாலினிடம் துணைகேப்டன் வாழ்த்து

தினகரன்  தினகரன்
மாற்றுத்திறனாளிகளுக்கான உலககோப்பை கிரிக்கெட் மு.க.ஸ்டாலினிடம் துணைகேப்டன் வாழ்த்து

சென்னை: இங்கிலாந்தில் நடைபெற இருந்த “மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்” போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று, துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுகனேஷ் மகேந்திரன் தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் 3ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், சுகனேஷ் மகேந்திரன், இங்கிலாந்தில்  ஆகஸ்ட் 3 முதல் 13ம் தேதி வரை நடந்த (World Series-England 2019)- கிரிக்கெட் போட்டியில் துணைக் கேப்டனாக பொறுப்பேற்று, வெற்றி பெற்ற பதக்கத்துடன் நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உடனிருந்தார்.

மூலக்கதை