ஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6

தினமலர்  தினமலர்
ஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6

ஆன்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

விண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆன்டிகுவாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. விண்டீஸ் வேகங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்திய டாப் ஆர்டர் சீட்டுக்கட்டு போல சரிந்தது. மயங்க் அகர்வால்(5 ரன்), புஜாரா (2 ரன்), கேப்டன் கோஹ்லி (9 ரன்) ரன்களில் நடையை கட்ட 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல், ரஹானா நிதானமாக ஆடினர். ராகுல் 44 ரன்களிலும், அடுத்து வந்த விஹாரி 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சதமடிப்பார் என எதிர்பாரக்கப்பட்ட ரஹானே, 81 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். முதல் நார் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. பன்ட் (20), ஜடேஜா (3) களத்தில் உள்ளனர். விண்டீஸ் தரப்பில் கேமர் ரோச் 3, கேப்ரியல் 2, சேஸ் 1 விக்கெட் கைபற்றினர்.

மூலக்கதை