செப்., 7 அதிகாலை, 1:55 மணி நிலவில் தரையிறங்கும்

தினமலர்  தினமலர்
செப்., 7 அதிகாலை, 1:55 மணி நிலவில் தரையிறங்கும்

சென்னை, ''சந்திரயான் - 2 விண்கலம், செப்., 7 அதிகாலை, 1:55 மணிக்கு, நிலவில் தரையிறங்கும்,'' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ' தலைவர், சிவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: சந்திரயான் - 2 விண்கலம், நிலவை சுற்றி, நீள்வட்ட பாதையில் சென்று கொண்டுள்ளது.அதை, நீள்வட்ட பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு மாற்றும் பணிகள், இனிவரும் நாட்களில் துவங்கும்.செப்., 7 அதிகாலை, 1:40 மணிக்கு, சந்திரயான் - 2 விண்கலத்தை நிலவில் தரையிறக்கும் பணிகள் துவங்கும்.

அதைத் தொடர்ந்து, 15 நிமிடங்களில், அதிகாலை, 1:55 மணிக்கு, சந்திரயான் - 2 விண்கலம், நிலவில் தரையிறங்கும். நிலவில் தரையிறங்கும்போது, விண்கலத்தின் வேகம், மணிக்கு, 1.6 கி.மீ., ஆக இருக்கும்.அந்த வேகத்தை, பூஜ்யமாக குறைக்க வேண்டும். அது, மிகவும் சவாலானது. இந்த நிகழ்விற்காக, ஆவலாக காத்திருக்கிறோம். இஸ்ரோவில், ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. யார் திறமையானவர்களோ, அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.இவ்வாறு, சிவன் கூறினார்.

மூலக்கதை