மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள் தூண்டி விடுகிறார் இம்ரான்

தினகரன்  தினகரன்
மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள் தூண்டி விடுகிறார் இம்ரான்

இஸ்லாமாபாத்: ‘ நியூயார்கில் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள்,’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஆளும் இம்ரான்கானின் தெக்ரிக் இன்சாப் கட்சி, காஷ்மீர் விவகாரத்தை உலக அமைப்புக்களிடம் எடுத்து செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் கட்சியின் வெளிநாடு வாழ் செயலாளர் அப்துல்லா ரியாரிடம் பிரதமர் இம்ரான் ஆலோசனை நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் நடக்கும்  ஐநா சபையின் பொதுக் கூட்டத்தின்போது பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்காவில் வாழும்பாகிஸ்தானியர்கள், நியூயார்க்கில் போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு வெளிநாடு வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலக்கதை