நாடாளுமன்ற விவாதத்தில் ஈடுபட்டபோது எம்பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் : நியூசிலாந்தில் சுவாரஸ்யம்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற விவாதத்தில் ஈடுபட்டபோது எம்பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் : நியூசிலாந்தில் சுவாரஸ்யம்

வெலிங்டன்: நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பி.யாக இருப்பவர் டமாடி கபி. எதிர்க்கட்சி எம்பி.யான இவருக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தந்தை டமாடி கபி, தனது குழந்தை ஸ்மித்துடன் வந்தார். பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற விவாதத்தில் அவர் தனது குழந்தையை கையில் ஏந்தியபடியே காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்டு, அவரிடம் இருந்து குழந்தையை வாங்கினார். பின்னர், குழந்தையை தன்மடியில் கிடத்தி அங்கு பாட்டிலில் இருந்த புட்டி பாலை குழந்தைக்கு புகட்டினார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஓரினச் சேர்க்கையாளர்எம்பி டமாடி கபி, ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அவர் ஸ்மித் என்ற ஆண் நண்பரை திருமணம் செய்துள்ளார். தற்போது இருவரும் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளனர். இதைதான், தனது பேறுகால விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு கபி தூக்கி வந்தார். நியூசிலாந்தில் ஓரினச் சேர்க்கை ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையல்லநியூசிலாந்த்தை சேர்ந்த தலைவர்கள் இதுபோல் குழந்தையின் மூலம் பிரபலமாவது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன், நியூசிலாந்து பிரதமர் அர்டெர்ன், ஐநா.வில் ஆற்றிய தனது முதல் உரையின்போது தனது  கைக்குழந்தையுடன் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை