கர்ப்பமானதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நடிகை

என் தமிழ்  என் தமிழ்
கர்ப்பமானதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நடிகை

பிரபல நடிகை மீண்டும் கர்ப்பமானதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, சில மாதங்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.

புன்னகைக்கு பெயர்போன நடிகை, தமிழின் முன்னணி கதாநாயகியாக இருக்கும்போதே நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். திருமணத்துக்கு பின் குழந்தை பிறந்ததால் சில ஆண்டுகள் நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். இதனால் அந்த நடிகை சினிமாவில் மார்க்கெட் இழந்தாராம்.

பின்னர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த அந்த நடிகை, ஒருசில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் அந்த நடிகை மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக செய்திகள் பரவுகிறதாம். இதனால் ஓய்வெடுக்க முடிவு செய்த நடிகை, மீண்டும் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை