ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா?... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா?... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

டெல்லி: ப.சிதம்பரம் வழக்கில் சற்று நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. முன்னதாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். முதலில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது. பின்னர் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சற்று நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இரு தரப்பு வாதம்  * ஐ.என்,எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிஐ மனு. * ப.சிதம்பரத்துக்கு எதிராக ஜாமினில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது; ஜாமீன் அடிப்படையில் ப.சிதம்பரத்தை கைது செய்ததாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் மேத்தா வாதம் * குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. * ஐ.என்,எக்ஸ் மீடியா முறைகேட்டில் சதியை வெளிக்கொண்டுவர காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். * மவுனமாக இருப்பது அரசியல் சட்ட உரிமை; அதுபற்றி நாம் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. * ஐ.என்,எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான எந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்களுடன் வைத்து சிதம்பரத்தை விசாரிக்க வேண்டி உள்ளது. * உயர் நீதிமன்ற பாதுகாப்பை சிதம்பரம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்; சிபிஐ இதனை தொடர்ந்து சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் வாதம் செய்தார். * ஐ.என்.எக்ஸ் வழக்கில் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது: கபில் சிபில் * வழக்கில் விசாரணை ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால் சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை: கபில் சிபில் வாதம் * சிதம்பரத்தை மட்டுமே குறிவைக்கிறது; ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்தது தனிப்பட்ட முடிவல்ல: சாதாரண நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கியவர் தான் நிதியமைச்சராக இருந்த சிதம்பரம்: கபில் சிபில் வாதம் *  ஒப்புதல் வழங்கிய 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை இல்லை: கபில் சிபில்* சிபிஐ இந்த வழக்கு பதிவு செய்த கட்டத்திலேயே விசாரித்து இருக்க முடியும்:  பல ஆவணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள்... சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது? கபில் சிபில் கேள்வி இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதத்தை தொடங்கினார் அபிஷேக் மனு சிங்வி; * இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள்; வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் கைது நடவடிக்கை வேண்டும். அபிஷேக் மனு சிங்வி* இஷ்டம் போல் கைது செய்வது ஒருபோதும் கூடாது: இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்து பல மாதங்களுக்கு பிறகும் ப.சிதம்பரம் அழைக்கப்படவில்லை: சிங்வி* ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள வைப்பதற்கான கருவியல்ல காவலில் எடுத்து விசாரிக்கும் முறை: அபிஷேக் மனு சிங்வி.* சாட்சிகளை கலைத்தார் என்று சிதம்பரம் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை.* தன் மீதான வழக்கில் தன் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க அனுமதி கேட்கிறார் ப.சிதம்பரம்: குற்றம்சாட்டப்பட்டவர்கள் தன் வாதங்களை முன்வைக்க உரிமை உண்டு என அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்தார். இதற்கு சிபிஐ தரப்பு துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு;  * சிதம்பரம் சாதாரண மனிதர் அல்ல; அவர் படித்தவர், சட்டம் அறிந்தவர், பதில் சொல்லாமல் தட்டிக் கழிப்பது எப்படி என அவருக்கு தெரியும்.. சிபிஐ வாதம்* ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீன் அளிக்கப்பட்டது: துஷார் மேத்தா * விசாரணை காவலில் எடுத்து விசாரிக்காமல் சிதம்பரத்திடம் இருந்து உண்மையை பெற முடியாது: உண்மையை கண்டறிய வேண்டும் என்பதற்காக தான் காவலில் கேட்கிறோம்: துஷார் மேத்தா * தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது , காவலில் எடுத்து விசாரிக்க கோருவது எங்கள் உரிமை, அதற்கான தேவையும் உள்ளது: துஷார் மேத்தா வாதம்* சிதம்பரத்தை சுற்றியிருக்கும் பாதுகாப்பு வளையத்தை நீக்காமல், எங்களால் உண்மையை நெருங்க முடியாது: குற்றத்தின் தன்மையை உணர்ந்து , முன் ஜாமினை மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதுதான் அந்த பாதுகாப்பு வளையம் உடைந்தது: துஷர் மேத்தாஇதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் தன் தரப்பு மீதான வாதத்தை துவக்கினார் ப.சிதம்பரம்; * வெளிநாட்டு வங்கிகளில் எனக்கு கணக்கு இல்லை.. மகனுக்கு மட்டுமே கணக்குகள் உள்ளது: ப.சிதம்பரம் * கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி சிபிஐ கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன்:  ப.சிதம்பரம் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து 30 நிமிடங்களில் நீதிபதி உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சற்று நேரத்தில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

மூலக்கதை