ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்

தினகரன்  தினகரன்
ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்

டெல்லி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.இதனிடையே ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐயின் மனு மீதான தீர்ப்பை 5.30 அளவில் சிறப்பு நீதிமன்றம் வழங்குகிறது.   ப. சிதம்பரம் நேற்று அதிரடியாக கைதுபல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டார் ப.சிதம்பரம்.ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். ப.சிதம்பரத்துக்கு INS மீடியா வழக்கில் உள்ள தொடர்பு குறித்து அவர் விளக்கம் அளித்தார்.  இதையடுத்து சிதம்பரம் தரப்பில் கபில்சிபல் வாதத்தை துவக்கினார். கபில்சிபல் : இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.கபில்சிபல் : இந்த வழக்கில் பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கபில்சிபல் : உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை முடிவடைந்துவிட்டது. இதனால் ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபம் என்ன இருக்கிறது?கபில்சிபல் : எனவே சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.கபில்சிபல் : ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம்.கபில்சிபல் : சி.பி.ஐ. அழைப்பை சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை.கபில்சிபல் : இதெல்லாம் நடந்துள்ளது என சி.பி.ஐ கூறுவதெல்லாம் சத்திய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது அல்ல, 2018 ஜூன் மாதம் நடந்த விசாரணை புத்தகத்தை சமர்ப்பியுங்கள், ஒத்துழைப்பு தந்தாரா இல்லையா என பார்க்கலாம்.கபில்சிபல் : நேற்று இரவு விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ சொன்னது , ஆனால் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார்கள், இப்போதும் கூட விசாரிக்க வேண்டுமென சொல்கிறார்கள் ஆனால் அவர்களிடம் கேள்விகளே இல்லை.கபில்சிபல் : நேற்று சி.பி.ஐ சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.(((சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளை கபில்சிபல் நீதிபதியிடம் கொடுத்தார்))கபில்சிபல் : 12 கேள்விகளும் உங்கள் முன் உள்ளது, இவை அனைத்துக்கும் சிதம்ப்ரம் பதில் கூறியுள்ளார். எப்படி ஒத்துழைப்பு தரவில்லை என கூறலாம்கபில்சிபல் : 2017-ல் வழக்கு பதிவு செய்த போது சிதம்பரத்திடம் விசாரித்திருக்கலாம்.2018-ல் விசாரணைக்கு அழைத்த போது கூட விசாரித்திருக்கலாம்.ஆனால் எதையுமே செய்யவில்லைகபில்சிபல் :  சிதம்பரம்பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாக கூறினார்கள் ; முன் ஜாமின் மனு மீது 7 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டது ; இதுதான் பாதுகாப்பு வளையமா ? கபில்சிபல் : வழக்கு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது எல்லாம் ஆதாரமில்லை, விசாரணைக்கு உதவும் அம்சங்களே ; அதே நேரத்தில் சிதம்பரத்தை நடத்திய விதம் கடும் எதிர்ப்புக்குரியது. கபில்சிபல் : சிதம்பரத்தை மட்டுமே குறிவைக்கிறது சிபிஐ.ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்தது தனிப்பட்ட முடிவல்ல கபில்சிபல் : சாதாரண நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கியவர் தான் நிதியமைச்சராக இருந்த சிதம்பரம். ஒப்புதலுக்கு அவர் பொறுப்பேற்க இயலாது.கபில்சிபல் : ஒப்புதல் வழங்கிய 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை இல்லை.சிபிஐ கூறுவது எல்லாம் வேத வாக்கு அல்ல.கபில்சிபல் : பல ஆவணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்..கபில்சிபல் : 24 மணி நேரமாக சிதம்பரத்தை தூங்கவிடவில்லை. கபில்சிபல் : புகார் எழுந்து 10 ஆண்டுகளுக்குப் பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுகபில்சிபல் : 12 கேள்விகள் சிதம்பரத்திடம் கேட்கப்பட்டுள்ளன. அதில் 6 கேள்விகளுக்கு ஏற்கனவே அவர் பதிலளித்துள்ளார்.கபில் சிபல் : கேள்விகளை  சி.பி.ஐ பொதுவாக வெளியிட வேண்டாம் ஆனால் அந்த கேள்விகளில் உண்மை இருக்க வேண்டும் எனவே விரும்புகிறோம்.

மூலக்கதை