விற்பனை அதிகரிப்பால் 9 ஆண்டில் இல்லாத அளவிற்கு ஜூலையில் உச்சத்தை தொட்டது பெட்ரோல் இறக்குமதி

தினகரன்  தினகரன்
விற்பனை அதிகரிப்பால் 9 ஆண்டில் இல்லாத அளவிற்கு ஜூலையில் உச்சத்தை தொட்டது பெட்ரோல் இறக்குமதி

புதுடெல்லி: ஜூலை மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது. அதே தருணத்தில், கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து ஜூலை மாதம் வரையில் பெட்ரோல் இறக்குமதி உச்சபட்ச அளவை எட்டியுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டம் மற்றும் பரிசீலனை பிரிவின் (பிபிஏசி) புள்ளிவிவரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாது இடத்தில் உள்ள இந்தியாவின் கடந்த ஓர் ஆண்டில்  1.2 சதவீதம் குறைந்துள்ளது. முன்னதாக, 19.34 மில்லியன் டன்கள் இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், முந்தைய மாதத்தைவிட கடந்த மாதம் 14.6 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஜூலை மாதத்தில் பெட்ரோல் இறக்குமதி 2,30,000 டன்களை எட்டியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பார்த்தால் இதுதான் அதிகபட்ச அளவு அதிகரித்–்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பெட்ரோல் விற்பனை ஓர் ஆண்டிற்கு முன்பு 2.52 மில்லியன் டன்களாக இருந்தது. அது தற்போது 8.8 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்என்ஜி இறக்குமதி, கடந்த 2018 பிப்ரவரியில் இருந்து தற்போது 8,50,000 டன்களாக குறைந்துள்ளது. சமீப மாதங்களாக கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.  நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதியும் குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா சலுகைகளை நிறுத்தியதால் சரக்கு போக்குவரத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மூலக்கதை