விண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு

தினகரன்  தினகரன்
விண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு

அமெரிக்கா: விண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. உலகின் பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடியில் இருந்து நீரை எடுத்து வரும் நிலையில், ரிச்சர்ட்ஸ் ரெயின் வாட்டர் நிறுவனம் நீருக்காக வானை நம்பியுள்ளது. நீர் மாசுபாடு அடைந்து வரும் நிலையில், தூய்மையான நீருக்காக 2000-மாவது ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம்,  மழைத்துளிகளை அரை லிட்டர் பாட்டிலில் நிரப்பி விற்று வருகிறது. வீட்டின் மொட்டை மாடிகளில் இருந்து வரும் மழை நீரில் முதல் 10 நிமிடங்கள் சேகரிக்காமல் விட்டுவிட்டு, அதன்பின் வரும் நீரை, ஃபைபர் கண்ணாடிக் குடுவையில் அடைத்து, அல்ட்ரா வயலெட் ஒளி, ரிவர்ஸ் ஆஸ்மாஸில், குளோரினுக்கு பதில் ஆக்சிஜன் ஆகிய மூன்று நிலை வடிப்பான் மூலம் சுத்திகரித்து விற்று வருகிறார்.ஆயிரம் சதுர அடி இடத்தில் 3 சென்டி மீட்டர் மழை பெய்தால், அதன் மூலம் 2 ஆயிரத்து 82 லிட்டர் தூய்மையான நீர் கிடைக்கும். டெக்சாஸ், கில்ன், மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாகாணங்களில் வீடுகளின் 49 ஆயிரம் சதுர மேற்கூரைகளில் இருந்து ஆண்டில் சராசரியாக 152 சென்டிமீட்டர்  பெய்யும் மழை நீரை சேமித்தால் அதிலிருந்து கிடைக்கும் 60 லட்சம் லிட்டர் நீர் 2 ஆயிரம் பேரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதாகக் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அனுமதி பெற்ற இந்த முதல் நிறுவனத்துக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

மூலக்கதை