ஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் கார்ட்டர் லேக் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் சுமேத் மன்னார் என்பவர் உயிரிழந்தார். 90 அடி ஆழத்தில் சேற்றில் சிக்கிய அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஜம்பிங் ஜாக் பகுதிக்கு சென்ற 27 வயது மாணவர் சுமேத், வீடு திரும்பாததால் அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 25 அடி உயர பாறையில் இருந்து குளத்தில் குதிப்பது இங்கு சாகச விளையாட்டு.குளத்தில் குதிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால் பலரும் இங்கு விளையாடுவது வழக்கமாக உளளது. கோடைக்காலங்களில் பனி உருகி நீர் அதிகமாக காணப்படும் என கூறப்படுகிறது. சுமேத் மன்னார் நீரில் மூழ்கியது உறுதியானதும் அவரை காப்பதற்காக முதலில் உயிர் காக்கும் மிதவைகளையும் ரப்பர் வளையத்தையும் நீருக்குள் வீசினர். பின்னர் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் நீருக்குள் மாணவரின் உடலைத் தேடினர். இரவு நேரமாகி விட்டதால் மீட்பு முயற்சி கைவிடப்பட்டது என கூறப்படுகிறது. மீண்டும் காலையில் தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீச்சல் வீரர்கள் 90 அடி ஆழத்தில் ஒரு பாறையில் சிக்கி மாணவர் சுமேத் உடல் கிடப்பதை கண்டுபிடித்து அதனை மீட்டனர். பின்பு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூலக்கதை