அமெரிக்க ஏரியில் மூழ்கி இந்தியர் பலி

தினமலர்  தினமலர்
அமெரிக்க ஏரியில் மூழ்கி இந்தியர் பலி

வாஷிங்டன்: இந்தியாவை சேர்ந்தவர் சுமேத் மன்னார்(27). இவர்அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் உள்ள பல்கலையில் படித்து வந்தார். அவர், அப்பகுதியில் உள்ள கிரேடர் ஏரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு ஏரியில் குதித்த அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது சடலத்தை தேடும்பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பின் அவரது சடலம் கிடைத்தது.

மூலக்கதை