பட தலைப்பை கசிய விட்ட நடிகை

என் தமிழ்  என் தமிழ்
பட தலைப்பை கசிய விட்ட நடிகை

பிரபல தெலுங்கு நடிகை, தமிழில் அறிமுகமாகும் படத்தின் தலைப்பை சமூக வலைதளத்தில் கசிய விட்டுள்ளாராம்.

தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நடிகை, தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறாராம். தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்து புகழின் உச்சத்துக்கு சென்ற அந்த நடிகையை, தமிழில் தளபதி நடிகருடன் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால் அந்த வாய்ப்பை நூலிலையில் பாலிவுட் நடிகை தட்டி சென்றுவிட்டாராம்.

இருப்பினும் அவர் தற்போது முன்னணி நடிகருடன் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறாராம். படத்தின் பெயரை வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வந்ததாம். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதள பக்கத்தில் படத்தின் தலைப்பை நடிகை பதிவிட்டுவிட்டாராம். இதனால் கோபமடைந்த படக்குழு நடிகையை கண்டித்ததாம். இதனையடுத்து நடிகை அந்த பதிவை நீக்கி விட்டாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை