மோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

தினமலர்  தினமலர்
மோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்; கடந்த 16-ம் தேதி லண்டன் இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.அப்போது பாக். ஆதரவு பெற்ற காலிஸ்தான் சீக்கியர்கள் திடீரென விழா கூட்டத்தினர் மீது முட்டை, பிளாஸ்டிக் பாட்டீல்களை வீசி தாக்கினர். மேலும் மூவர்ண கொடியை கிழித்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்திய தூதரகத்தில் நடந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது இந்திய தூதரகத்தில் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்திய- பிரிட்டன் நட்புறவு வலுப்பெற இருவரும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

மூலக்கதை