இலங்கை இனப்படுகொலை குறித்த தீர்மானம் ஐ.நாவுக்கு அனுப்பிவைப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கை இனப்படுகொலை குறித்த தீர்மானம் ஐ.நாவுக்கு அனுப்பிவைப்பு

இலங்கை வடக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையார் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்றும் இதற்கு சர்வதேச விசாரணையே அவசியமென்றும் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அத் தீர்மானப் பிரதிகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை